வவுனியாவில் குளவி கொட்டு- ஐவர் வைத்தியசாலையில் அனுமதி  

வவுனியா கோவில்குளம் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று   (21.02.2023) காற்றில் கலைந்த குளவி வீதியால் சென்றவர்கள் மீது கொட்டியதால் பாடசாலை சென்ற மாணவர் ஒருவர் உட்பட ஐவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிவிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் பின்னர் மாலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Please follow and like us: