விமலுக்கு எதிரான பிடியாணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை கொழும்பு, பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று மீளப் பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் இன்று முன்னிலையானதை அடுத்தே குறித்த பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச உட்பட 7 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கொழும்பு, பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.