1200 நாட்களிக்கு பின் சதமடித்த விராட் கோலி

அவுஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையிலான போர்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் இந்தியா 571 ஓட்டங்களுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை நிறைவு செய்துக்கொண்டது.
இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை அடித்தார்.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்தார்.
தற்போது சுமார் 1,206 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சதத்தை பதிவு செய்துள்ளார்.
சர்வதேச அரங்கில் அனைத்துப் போட்டிகளிலும் விராட் கோலி பெறும் 75வது சதம் இதுவாகும்.