விஜயகுமாரதுங்கவின் 35ஆவது சிரார்த்த தினம் சீதுவையில் அனுஷ்டிப்பு

றைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகுமாரதுங்கவின் 35ஆவது சிரார்த்த தினம் இன்று (16) காலை சீதுவையில் அமைந்துள்ள அவரது சமாதியருகில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் விஜயகுமாரதுங்கவின் பாரியாருமான சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டு விஜயகுமாரதுங்கவின் சமாதியில் மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் கலைஞர்கள், விஜயகுமாரதுங்கவின் ஆதரவாளர்கள், ரசிகர்கள், மதத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

விஜயகுமாரதுங்க 1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: