கொழும்பிற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கான அவசர அறிவிப்பு  

குருந்துவத்தை பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக அப்பகுதியில் உள்ள வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விகாரையின் வருடாந்திர பெரஹரா இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

பெரஹரா பௌதாலோக மாவத்தை, கனத்த சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி பொரளை சந்தி, மருதானை வீதி, பேஸ்லைன் குறுக்கு வீதி, லெஸ்லி ரணகல சந்தி ஆகிய இடங்களில் திரும்பி, அதே பாதையில் விகாரைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அசௌகரியத்தை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us: