எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவசர கடிதம்  

எதிர்க்கட்சிகள் கூட்டாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்:-

தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி தேர்தல்களை நடத்துவதற்கு தடையாக இருந்த சட்ட ரீதியான அனைத்து முட்டுக்கட்டைகளும் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கு பின்னரும் நிதியமைச்சின் செயலாளரை அழைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேசுவதற்கான காரணங்கள் எதுவும் புலப்படவில்லை. இனியும் தேர்தல்களை தாமதிக்காமல், வரும் 19 ஆம் திகதிக்கு முன்னதாக அதனை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், எம்.ஏ. சுமந்திரன், ஆகியோருடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைசாத்திட்டுள்ளன.

Please follow and like us: