தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் புதிய செய்தி

இந்த வாரத்தின் இறுதிக்குள் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குசீட்டுக்கள் கிடைக்கப்பெறவில்லையாயின், அடுத்த வாரம் தபால் மூல வாக்களிப்பு குறித்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கான திகதியை மாற்றுவது குறித்து இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Please follow and like us: