ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 65 உறுப்பினர்களை நீக்க ஐ.தே.க. தீர்மானம்

உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 65 பேரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பிரிவினரிடம் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, அவர்களை நீக்குவதற்கு கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் வேட்பாளர்களை  முன்னிறுத்துவதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25 சதவீத ஒதுக்கல்  வழங்கவும் ஐ.தே.கவின் செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: