பிரித்தானியாவில் மாறப்போகும் மாணவர் விசா கொள்கை

பிரித்தானிய அரசாங்கம், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சார்பு விசாக்களை (Dependents VISA) கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

2022ஆம் ஆண்டில் குடும்ப உறுப்பினர்களை நாட்டிற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளதால் இது குறித்து ஆராயப்படுகிறது.

அரசாங்கம் இந்த கொள்கை மாற்றங்களை தொடர்ந்து விவாதித்து வருவதால், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை “உயர் மதிப்பு” பட்டப்படிப்பினை படிக்காத வரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர தடை விதிக்கப்படலாம் என்று த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், கணிதம் மற்றும் பொறியியல் போன்ற பொருளாதாரத்திற்கு உயர் மதிப்புள்ளதாக கருதப்படும் பட்டப் படிப்புகளை மாணவர்கள் படித்தால் மட்டுமே குடும்ப உறுப்பினர்களை அங்கு அழைத்து வர முடியும்.

தற்போது, ​​முதுநிலை பட்டப்படிப்பில் ஈடுபடும் மாணவர்கள், எந்தப் விடயதானத்தை தொடர்ந்தாலும், குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரலாம்.

Please follow and like us: