புதுக்குடியிருப்பில் கசிப்புடன் சென்ற இருவர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதிக்கு பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்டு  80 போத்தல்  கசிப்பினை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் தருமபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த குற்ற செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

கிளிநொச்சி தரமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஏ-35 வீதியின் நெத்தலியாற்றுப்பகுதியில் நேற்று (05) அதிகாலை வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது தர்மபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதிக்கு பொலித்தின் பையில் பொதி  செய்யப்பட்டு மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட 80  போத்தல் கசிப்பினை கைப்பற்றியதுடன் அதனை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்களையும்  கைது செய்துள்ளதுடன் குறித்த குற்றச் செயலுக்காக பயன் புடுத்திய மோட்டார் சையிக்கிளையும் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிவான் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: