மாசி 5, 2023

மன்னாரில் லொறியில் வெடிபொருட்கள் கடத்திய இருவர்  கைது

சிறிய லொறி ஒன்றின்  கீழ் இரகசியமாகப் பெட்டி ஒன்றை அமைத்து அதற்குள்   டெட்டனேட்டர்கள் மற்றும் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற நிலையில் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர்  கைது செய்யப்பட்டதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று பிங்கிரியவுக்கு  சென்றுள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்   தெரிவித்துள்ளார்.

அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் வெடிபொருட்களும்   குறித்த  இரகசிய பெட்டியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்ததை  பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Please follow and like us: