பொறியியலாளர் வீட்டில் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் உட்பட இருவர் கைது!  

சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்த 14 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி விற்பனை செய்தமை தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரான பணிப்பெண் தவிர, அவருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

75 வயதான ஓய்வுபெற்ற பொறியியலாளர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us: