இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் இரண்டு புது முகங்கள்

எதிர்வரும் மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியில் நிஷான் மதுஷ்க மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான நான்கு நாள் போட்டியில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இருவரும் அந்தந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய 23 வயதான நிஷான் மதுஷ்கா, அவர்களுடன் பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 150 ஓட்டங்களையும், முதல் நான்கு நாள் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 241 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மிலன் லயன்ஸ் அணிக்கெதிரான நான்கு நாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 81 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Please follow and like us: