ரஷ்யாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்

ரஷ்யாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சாத்கா தீபகற்பத்தின் தெற்கு கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

சுமார் மூன்று மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து இவ்விரண்டு நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.

6.1 மெக்னிடியுட் அளவில் பதிவான முதல் நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி மாலை 06 மணி 03 நிமிடம் அளவில் ஏற்பட்டுள்ளது.

4.1 மெக்னிடியுட் அளவில் பதிவான அடுத்த நிலநடுக்கம் இரவு 08 மணி 44 நிமிடம் அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களினால் உண்டான சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தெளிவாகக் கூறப்படவில்லை.

Please follow and like us: