துருக்கி நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 7,800ஆக உயர்வு

துருக்கியிலும் சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 7,800-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, துருக்கியில் 5,894 பேர் பலியாகினர்.

சிரியாவில் குறைந்தது 1,932 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுகின்ற போதும், சீரற்ற வானிலையால் தாமதமாக இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Please follow and like us: