துருக்கி பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 15,000ஐ கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 15,000ஐ கடந்துள்ளது.

அங்கு மீட்பு பணிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

துருக்கியில் மாத்திரம் 12,391 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிப்பு ஏற்பட்ட பிரதேசங்களில் மீட்பு நடவடிக்கைகள் தாமதித்துள்ளதன் காரணமாக பொதுமக்கள் ஆவேசமாக நடந்து கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று துருக்கியின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Please follow and like us: