40 கி.மீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்க வேண்டும்

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்க வேண்டுமென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.
தியவன்னாவ ஈரநிலப் பகுதியில் வாழும் பறவைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களும் இதனால் விபத்துக்களை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் சில வாகனங்கள் அதிவேகமாக பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Please follow and like us: