மூன்று சிறார்கள், ஆட்டோ சாரதி உட்பட எழுவர் பலி – 53 பேர் காயம்

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் “சமர் செட்” பகுதியில் பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி விபத்துள்ளாகினதில் எழுவர் பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.
விபத்தில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், விபத்துக்குள்ளான ஆட்டோவின் சாரதி ஒருவருமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
வேனில் பயணம் செய்த இரு ஆண்களும், ஒரு பெண்ணும் மூன்று சிறார்களும் மற்றும் ஆட்டோ சாரதியுமே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.