பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வடமேற்கு பகுதியில் பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண்குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர்.

அயா என அழைக்கப்படும் (அராபிய மொழியில் அதிசயம்) இந்த குழந்தையை மீட்பு பணியாளர்கள் பார்த்தவேளை குழந்தை தாயின் தொப்புள்கொடியுடன் துண்டிக்கப்படாத நிலையிலேயே காணப்பட்டது.

அயாவின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது குழந்தை மருத்துவமனையில் காணப்படுகின்றது

அயாவை மிகமோசமான நிலையில் கொண்டுவந்தனர் உடல்முழுவதும் காயங்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை சுவாசிக்க முடியாத நிலையில் காணப்பட்டது என குழந்தைக்கு சிகிச்சை வழங்கும் ஹனிமரூவ் என்ற குழந்தை நல மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக காணப்படுகின்றது.

அயாமீட்கப்படும வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின புழுதியால் மூடப்பட்ட குழந்தையுடன்  சேதமடைந்த வீடொன்றிற்குள்ளிருந்து நபர் ஒருவர் ஓடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியிருந்தது.

மீட்கப்பட்ட குழந்தையை தூரத்து உறவினரான கலில் அல் சுவாடி சிரியாவின் அவ்ரின் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் வைத்தியர் மரூவிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் குழந்தையை தத்தெடுப்பதற்காக சமூக ஊடகங்களில் தகவல்களை கோரியுள்ளனர்.

நான் இந்த குழந்தையை தத்தெடுத்து கௌரவான வாழ்க்கையை வழங்க விரும்புகின்றேன் என நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

குவைத்தை சேர்ந்த தொலைக்காட்சி அறிவிப்பாளர்  குழந்தையை தத்தெடுப்பதற்கு சட்டநடைமுறைகள் அனுமதித்தால் குழந்தையை நான் தத்தெடுக்க தயார் எனதெரிவித்துள்ளார்.

குழந்தை அயாவை தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர் என மருத்துவமனையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தூரத்து உறவினர்கள் வந்து குழந்தையை பொறுப்பேற்கும் வரை நான் அயாவை எவரிடம் ஒப்படைக்கப்போவதில்லை நான் எனது குழந்தைபோல அவளை பார்க்கின்றேன் என்கின்றார் மருத்துவர் அட்டியா அவருக்கு மகள் பிறந்து ஐந்துமாதங்களே ஆகின்றன வைத்தியரின் மனைவி அயாவிற்கும்  பாலூட்டுகின்றார்.

Please follow and like us: