இந்தியா – ஆஸ்திரேலியா வர்த்தக உறவில் பெரிய மாற்றம் ஏற்படும்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் வலுப்பெறும் என்று இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பர்ரி ஓபேட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “முன்பு இந்தியா – ஆஸ்திரேலியா தொழில் உறவு சற்று சுணக்கத்தில் இருந்தது. தற்போது வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு சாத்தியமாகி உள்ளது.அந்தவகையில் இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் மிகப் பெரும் மாற்றம் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.
தற்போதைய வர்த்தக ஒப்பந்தத்தால், 2025-ம் ஆண்டில்இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு 50 பில்லியன் டாலராக (ரூ.4.1 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.