இலங்கைக்கு உரம் வழங்கியமை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளிட்டுள்ள பதிவு  

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம்இ 10 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் நெல் உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

யு.எஸ் எய்ட் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 36 ஆயிரம் மெற்றிக் தொன் TSP பொசுப்பேற்று உரம் தாங்கிய கப்பல் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த நிலையில், இது இலங்கைக்கு உதவியளிக்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும் என்று அமெரிக்க தூதுவர் ஜுலி சங், தனது ருவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Please follow and like us: