100 தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் போராட்டம் ஆரம்பம்

பெட்ரோலியம், துறைமுகம், மின்சாரம், சுகாதாரம், நீர் வழங்கல், கல்வி, வங்கி, தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 100 தொழிற்சங்கங்கள் (TUs) இன்று (1) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய வரிக் கொள்கைகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), இலங்கை மின்சார சபை (CEB), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB), இலங்கை மத்திய வங்கி (CBSL) போன்ற அரச மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA), இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU), இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU) என்பனவும் இன்றைய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன.
காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் நாளை காலை 7 மணி வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.