தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (03) கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்தனர்.

அதன் பின்னர், பல சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆய்வு செய்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு வந்துள்ள நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை இன்று அறிவிக்கவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று காலை கூடி தற்போதைய நிலவரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ள நிலையில், இன்று மதியம் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படவுள்ளது.

Please follow and like us: