தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிக்கப்படும் என கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடி இந்த அறிவிப்பினை தெரிவித்துள்ளனர்.

நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரிகள், பொலிஸ் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் புதிய திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் முதல் சில நாட்களில் நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்ததையடுத்து, தேசிய தேர்தல் ஆணையகம் தேர்தல் தொடர்பான அறிவிப்பை ஒத்திவைத்துள்ளது.

Please follow and like us: