தமிழர் எழுச்சிப் பேரணியில் ஸ்ரீலங்கா தேசியக்கொடியை எரிக்க முற்பட்ட மர்மநபர்

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் இறுதிநாளான நேற்று, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பேரணியின் இறுதி நிகழ்வுகள் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தன. இதன்போது மர்ம நபர் ஒருவர் அங்கு ஸ்ரீலங்கா தேசியக் கொடியை எரிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, போராட்டத்தில் நிலவிய பதற்றம் சிறிது நேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Please follow and like us: