யாழில் தமிழில் பாடல் பாடிய அமைச்சர்!

நாட்டின் பல பகுதிகளில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தமிழில் பாடல் பாடியுள்ளார்.

“தோல்வி நிலையென நினைத்தால்..” என்ற பாடலையே அவர் பாடியுள்ள நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் உதவி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: