22ம் திகதி IMF இன் முதலாவது கடன் உதவி

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடன் உதவியில் முதலாவது தொகை இம்மாதம் 22ம் திகதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி அன்று 330 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் 20ம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: