தேர்தல் மீண்டும் பிற்போகும் சாத்தியம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்தவும் அதற்கான அஞ்சல்மூல வாக்குப் பதிவுகளை இம்மாதம் 28-31ஆம் திகதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானியையும் தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் உரிய தினத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என விடயமறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை தடுக்க முடியாது என நிதியமைச்சின் செயலருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அதன்படி நிதியை ஒதுக்க இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அத்துடன் தேர்தல் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Please follow and like us: