சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும்

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாறிய அவர் இது தொடர்பாக தெரிவித்த கருத்துகள்:-

  • செவிபுலனற்ற 50 பேருக்கு பயிற்சியளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் காலம் இந்த வாரத்துடன் முடிவடைந்தது. அந்த 50 பேரும் மிகவும் வெற்றிகரமாக வாகனங்களை ஓட்டியுள்ளனர்.
  • விபத்து ஏதும் இல்லை அதன் அடிப்படையில் இலங்கை முழுவதற்கும் செவிபுலனற்றோருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டம் இந்த வாரம் தொடங்குகிறது.
  • அதேநேரம், கால்களை இழந்த ஓட்டுநர் உரிமம் கொண்ட முன்னாள் படைவீரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ அறிக்கை பெறப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
  • இப்போது அதை 4 மற்றும் 8 ஆண்டுகள் வரை நீடித்துள்ளோம்.
Please follow and like us: