அரச நலன்புரி உதவிகளுக்கான கால அவகாசம் மார்ச் 31 நிறைவு  

சமுர்த்தி உள்ளிட்ட அரச நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போரிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அதன்படி நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி உதவிகள் சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 அரச கொடுப்பனவுகளை பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்யாதவர்கள் அந்தப் உதவிகளை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சமுர்த்தி, முதியோர், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போர், கிராம உத்தியோகத்தரினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Please follow and like us: