வரி விதிப்பு தொடர்பான இடைக்கால தடை உத்தரவை நீடித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் சம்பளத்துக்கு வரி விதிக்கும் வருமான வரி திணைக்களத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தம்மிக்க கனேபொல மற்றும் ஏ.எஸ்.ஆர்.மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: