வாகன விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கி உறுதி

உள்நாட்டில் பாவித்த வாகனங்களின் விலைகள் அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகன கொள்ளளவு மற்றும் விற்பனையின் போது செலுத்த வேண்டிய வட்டி விகித அதிகரிப்பு, இறக்குமதிக்கான தடை, உதிரிப்பாகங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவையை இதற்கான பிரதான காரணமாகும்.
இது தொடர்பாக மத்திய வங்கியின் பிரதிநிதிகளுடன் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்ததினம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் குறித்து இப்போது தீர்மானிக்க முடியாது என்றாலும், வாகன கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்கள் உள்ளிட்ட விடயங்களில் சலுகை வழங்குவதாக மத்திய வங்கி உறுதி அளித்துள்ளது.
இவ்வாறான சலுகைகள் ஊடாக இலங்கையில் வாகனங்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.