மாசி 5, 2023

விபத்தில் சிறுவன் பலி

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார்  யாழ்ப்பாணம் வீதியியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் வீதியைக் கடப்பதற்கு முயற்சித்த போது அம்புலன்ஸ் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவன் 9 வயதுடைய பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனாவான்.

அ ம்புலன்ஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us: