13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒற்றையாட்சியின் கீழ் தரப்படும் ஒரு விடயம்

நாம் கேட்பது 13 ஆவது திருத்த சட்டத்தை அல்ல.அதாவது தமிழ் மக்கள் கேட்பது சமஷ்டி ரீதியான ஒரு அரசியல் யாப்பை என நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒற்றையாட்சியின் கீழ் தரப்படும் ஒரு விடயம்.

எங்களுடைய அதிகாரங்களை பகிர்ந்து தர வேண்டும், எங்கள் இடங்களை நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்கும் போது அவர்கள் மத்திய அரசாங்கத்தை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டும் என்பது போல் இந்த அரசியல் யாப்பு உள்ளது.

எனவே இதை ஒரு காரணமாக வைத்து 13 ஐ நடைமுறைப்படுத்தாதீர்கள் என சொல்லுவது அவர்களுடைய அறியாமை, அவர்களுடைய பிழையான கருத்துக்கள் மற்றும் பிழையான சிந்தனைகள் என்றே கூற வேண்டும்.

இவர்களின் இந்த செயலை அரசியல் ரீதியாக இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எண்ணுவதாக தான் நான் பார்க்கிறேன் என கூறினார்.

Please follow and like us: