டெலிகொம் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

முல்லேரியா மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் தொலைத்தொடர்பு (ஸ்ரீலங்கா டெலிகொம்) ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தொலைபேசி கம்பத்தை பொருத்திக் கொண்டிருந்த போது அங்கு காணப்பட்ட மின் கம்பியின் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கிய நபர் முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Please follow and like us: