மாணவர்களது போராட்டத்தில் கண்ணீர்ப்புகை தாக்குதல்

கொழும்பு, பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) இந்த எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
Please follow and like us: