தற்கொலை தாக்குதலில் தலிபான் ஆளுநர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பல்க் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில், மாகாண தலிபான் ஆளுநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை நடந்த இந்த குண்டு வெடிப்பில் பல்க் மாகாண ஆளுநர் மொஹமட் தாவூத் முஸம்மில் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாகாணத் தலைநகரான மஸார்-இ-ஷெரீப்பில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்தின் இரண்டாவது மாடியிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இது ஒரு தற்கொலை தாக்குதல் என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரி, தற்கொலை குண்டுதாரி அலுவலகத்துக்கு எப்படிச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது என்றார்.

இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Please follow and like us: