மாணவர் போராட்டம் – நீதிமன்றின் மற்றொரு தடை உத்தரவு

பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு எதிராக கோட்டை, நீதிவான் பிறப்பித்த உத்தரவினையடுத்து, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் அவ்வாறானதொரு உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதன்படி ஒல்கொட் மாவத்தை, டி.பி.ஜயா மாவத்தை, சங்கராஜ மாவத்தை உட்பட மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல வீதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகளைத் தடுக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (07) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில் கோட்டை நீதிவான் திலின கமகே விசேட நீதிமன்ற உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு உரிய உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மேலதிகமாக, கொழும்பில் வேறு பல நியமிக்கப்பட்ட வீதிகளை மறிப்பதிலிருந்து சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தவிர்க்குமாறும் நீதிமன்றம் நீதிவான் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.