ஆஸியின் தலைவராக தொடரவுள்ள ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவன் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவுஸ்திரேலியாவுக்கு தலைவராக செயற்படவுள்ளார்.

கடந்த வாரம் அணித்தலைவர் பெட் கம்மின்ஸின் தாய் மரியா இறந்ததைத் தொடர்ந்து இந்த தொடரில் அவர் பங்கேற்க மாட்டார்.

டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு கம்மின்ஸ் சுற்றுப்பயணத்தை விட்டு வெளியேறினார்.

ஸ்மித் அணித் தலைவராக பொறுப்பேற்றார்.

டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தோற்றது.

இந்த நிலையில், இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் க்ரிக்கட் தொடர் மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்கும்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான அணியில், பெட் கம்மின்ஸுக்கு பதிலாக யாரும் இணைக்கப்பட என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மித் அணியை பொறுப்பேற்றுள்ளதால், அவுஸ்திரேலியாவின் கடைசி ஐந்து ஒருநாள் தொடர்களில் நான்கு தலைவர்கள் செயற்பட்டுள்ளனர்.

செப்டம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெற்றார்.

அவருக்கு பதிலாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது, ​​ஜோஷ் ஹசில்வுட் அந்த தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

Please follow and like us: