துருக்கி பூகம்பத்தில் பலியான இலங்கை பெண் 

துருக்கி பூகம்பத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கலகெதரவிலிருந்து புலம்பெயர்ந்த 69 வயதான பெண்ணொருவரே இந்த அனர்த்தத்தில் பலியானார்.

பூகம்பத்தை அடுத்து காணாமல் போன அவர், சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து சடலத்தை அவரின் மகள் அடையாளம் காட்டியுள்ளார்.

இதேவேளை துருக்கி பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 29,000ஐ கடந்துள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தாமதிப்பதன் காரணமாக பொதுமக்கள் ஆவேசமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us: