ஒரு வருட சேவையை நிறைவு செய்து லெபனாலிலிருந்து நாடு திரும்பிய இலங்கை இராணுவத்தினர்

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் படையணியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் 13 ஆவது தலைமையக பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 97 பேர் ஒரு வருடகால சேவையை முடித்துக் கொண்டு நேற்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்தப் பிரிவில் 8 அதிகாரிகளும் 89 படையினரும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் நேற்று பகல் 12.00 மணியளவில் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானமான ET-8404 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 14 ஆவது பிரிவைச் சேர்ந்த 125 பேர் நாளை (03) அதிகாலை 02.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லெபனானுக்கு புறப்படவுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.