இலங்கை மீனவர்கள் தாக்குகின்றனர் மு க ஸ்டாலின் குற்றச்சாட்டு  

இலங்கையர்கள் இந்திய மீனவர்களை தாக்கி அவர்களின் மீன்பிடி மற்றும் உபகரணங்களை எடுத்துச் சென்றதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் இந்திய அரசு இலங்கையிடம் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் தோப்புத்துறை பகுதிக்கு கிழக்கே இம்மாதம் 15-ஆம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகினர்.

மூன்று விசைப்படகுகளில் சென்று அவர்களை தாக்கியது இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஸ்டானில் குற்றம் சுமத்தியுள்ளார்.

Please follow and like us: