இலங்கை – நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்  

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

2021 – 2023 ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்த தொடர் நடைபெறவுள்ளது.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மார்ச் 9 முதல் 13 வரை கிறிஸ்ட்சர்ச்சிலும், இரண்டாவது போட்டி மார்ச் 17 முதல் 21 வரை வெலிங்டனிலும் நடைபெறவுள்ளது.

2021-23 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது.

இந் நிலையில் 2-0 என்ற கணக்கில் இலங்கை இந்த தொடரில் வெற்றி பெற்றால் மற்றொரு அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும்.

மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 8 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் நியூஸிலாந்துடன் இலங்கை இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடும்.

Please follow and like us: