முக்கிய அறிவிப்பொன்றுக்கு தயாராகும் இலங்கை – மத்திய வங்கி ஆளுநர்  

இலங்கையின் தற்போதைய மற்றும் அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் விசேட தகவலொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர்,

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு, இந்தியா மற்றும் சீனா உட்பட அதன் அனைத்து முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெற்றுள்ளது.

மேலும் மார்ச் 20 அன்று IMF இடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பு பொதியினை பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் இலங்கை உருவாக்கியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன்னர் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி, அவர்களுடன் கலந்தாலோசித்து கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை நாடு ஏப்ரலில் அறிவிக்கும் என்றார்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதை நோக்கும்போது பிணை எடுப்பு என்பது பல மாத பேச்சுவார்த்தைகளின் உச்சகட்டமாக அமைந்துள்ளது.

Please follow and like us: