அமெரிக்க புலனாய்வு பிரிவால் இலங்கைக்கு அச்சுறுத்தலாம்

அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றில் வைத்து இன்று(22) தெரிவித்தார்.
அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு முக்கியஸ்த்தர்கள், இலங்கையின் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு ஆயுதங்களுடன் சென்று ஆய்வுகளை நடத்தி இருக்கிறார்கள்.
இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் புலனாய்வு பிரிவுக்கும் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பாகவே கருத வேண்டியுள்ளது.
அவர்கள் இலங்கையில் ஜனாதிபதி உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் நடத்தி இருக்கிறார்கள்.
உண்மையில் அமெரிக்காவுக்கும் அவர்களுக்கும் இடையில் என்னமாதிரியான விடயங்கள் பேசப்பட்டன என்று பாராளுமன்றில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.