பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து – ஜேர்மன் தூதுவர்

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என   இலங்கைக்கான ஜேர்மனியின்  தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us: