பிரபாகரன் பற்றிய இலங்கை இராணுவம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை என்று தமிழக அரசியல்வாதி பழ.நெடுமாறன் தகவல் வெளியிட்டிருந்தார்.

ஆனால் இதனை இலங்கை இராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது.

இது உண்மைக்கு புறம்பானது என்றும், அவர் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் இராணுவ ஊடகப்பிரிவின் பணிபாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த போது  கருணா, தயாமாஸ்டர் , அம்மான் உள்ளிட்டவர்கள், பிரபாரகனின் அடையாளத்தை  உறுதிபடுத்தினார்கள்.

அதேபோல பிரபாகரன் இறந்தமைக்கான மரபணு அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருக்கிறது என்றும், அவர்  தெரிவித்துள்ளார்.

Please follow and like us: