தொழிலாளர் நெடுங்குடியிருப்பில் தீ பரவல்

கினிகத்தேனை – கெனில்வத்த தோட்டத்தில் தொழிலாளர்களின் நெடுங்குடியிருப்பு ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் 4 வீடுகள் சேதமடைந்தன.

இதனால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் தீப்பரவல் காரணமாக நான்கு வீடுகளிலிருந்த தளபாடங்கள், அத்தியாவசிய ஆவணங்கள், ஆடைகள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ பரவலினால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அயலவர்களின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்படுவதற்கான காரணங்கள் இது வரை உறுதி செய்யப்படாத போதிலும், மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Please follow and like us: