நாளை விசேட ரயில் சேவை  

பயணிகளின் வசதிக்காக நாளை (15) 13 விசேட அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணை அடிப்படையில் இயங்கவுள்ளன.

அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை 13 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெறும்.

பயணிகள் மற்றும் ரயில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

Please follow and like us: