தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் மேற்குறிப்பிடப்பட்ட செயற்பாடுகள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களினதும் , பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படும் சம்பவம் தொடர்பான உண்மைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்க விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் விடுக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கையின் பிரகாரம் மேற்படி தீர்மானம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: